"திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை" அடித்துக் கொடுமைப்படுத்திய கணவன்... விரக்தியில் மனைவி திருமண புடவையிலேயே தூக்கிட்டு தற்கொலை

Update: 2023-07-28 06:09 GMT

திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை எனக்கூறி கணவன் கொடுமை தாங்காமல் மனைவி வீடியோ பதிவு செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் புதுவையை அதிரச் செய்துள்ளது...

திருக்கனூர் ரோஜா நகர் கே.மனவேலியை சேர்ந்தவர்கள் அரவிந்த் - மோனிகா தம்பதி... இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி மாலை மோனிகா தனது தாய் உண்ணாமலையிடம் தனது கணவர் குழந்தை இல்லை எனக்கூறி தன்னை கொடுமைப்படுத்துவதாக செல்போனில் புலம்பியுள்ளார். அடுத்த நாள் நேரில் பார்ப்பதாக உண்ணாமலை கூறிய நிலையில், 26ம் தேதி காலை மகளுக்கு அழைத்த போது அவர் ஃபோனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த தாய், தனது மூத்த மகள் சரண்யாவிடம் விவரத்தைக் கூறி மோனிகாவின் வீட்டில் நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். சரண்யா மோனிகாவின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது கதவு மூடி இருந்த நிலையில், ஜன்னல் வழியாகப் பார்த்த போது, தனது தங்கை திருமண புடவையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு பேரதிர்ச்சி கொண்டு அழுது புலம்பினார். உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மோனிகாவின் செல்போனை ஆய்வு செய்த அவரது உறவினர்கள், அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக 2 வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளதைக் கண்டறிந்தனர். அதில், தன்னை கணவர் அரவிந்த் குழந்தை இல்லை எனக்கூறி அடித்துக் கொடுமைப் படுத்துவதையும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அழுதபடி கூறி இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்