சென்னையில் உணவு டெலிவரி பாய்கள் மூலம் வீடு வீடா சென்ற கிஃப்ட் பாக்ஸ் - திறந்து பார்த்தால் அதிர்ச்சி

Update: 2024-11-24 08:48 GMT

சென்னையில் உணவு டெலிவரி பாய்கள் மூலம் வீடு வீடா சென்ற கிஃப்ட் பாக்ஸ் - திறந்து பார்த்தால் தலை சுற்றவைக்கும் அதிர்ச்சி மேட்டர்... உறைந்து போன போலீஸ்

பிரபலமான உணவு டெலிவரி செயலிகள் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

போதைப் பொருளை ஒழிக்க போலீசார் பல கட்ட முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் அவர்கள் சந்தேகப்படாத முறையில் சர்வ சாதாரணமாகப் போதைப் பொருளைக் கடத்திய சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் பலர் உணவு தேவைக்காக ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட பல செயலிகளைப் பயன்படுத்துகின்றனர்.இது மட்டுமல்லாமல் நண்பர்களுக்குப் பரிசுப் பொருட்களை உள்ளிட்ட பல பொருட்களையும் இந்த செயலிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலை அருகே போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்குச் சென்ற போலீசார் சந்தேகத்து இடமான முறையில் நின்று கொண்டிருந்த மகேஷ் மற்றும் பாரூக் என்ற இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்களிடத்தில் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள மெத்தபட்டமைன் மற்றும் எம் டி எம் ஏ மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஸ்விக்கி,சொமேட்டோ, போர்ட்டர்

உள்ளிட்ட டெலிவரி செயலிகளில் வேலை பார்க்கும் இளைஞர்களிடம் பரிசுப் பொருட்கள் என்று கூறி டெலிவரி செய்யச் சொல்வதும், அதற்காக அந்த இளைஞர்களுக்கு ரூ500, ரூ1000 எனக் கொடுப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.

நாள் முழுவதும் டெலிவரி செய்து கிடைக்கும் பணத்தை விட அதிகமாக இதில் பணம் கிடைப்பதால் டெலிவரி பாய்களும் இதில் ஆர்வம் காட்டி வந்ததாகக் கூறி இருக்கின்றனர். மேலும் டெலிவரி பாய்களுக்கு இதில் போதைப் பொருட்கள் கடத்து குறித்துத் தெரியாது என வாக்குமூலம் அளித்து இருக்கின்றனர்.கைதானவர்களுக்குப் போதைப் பொருளை உணவு டெலிவரி பாய்கள் மூலம் அனுப்பிய முசாபீர் என்பவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பல இளைஞர்களுக்குச் சிறிய வருமானமாகவும், பெரும்பாலான மக்களின் பசியைப் போக்கும் உணவு செயலிகள் மூலமாகப் போதைப் பொருளைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்