"பிரசவத்தின்போது கர்ப்பிணியின் மலக்குடலை வெட்டிய டாக்டர்..." - மனைவியின் நிலையால் பாடாய் பட்ட கணவன்

Update: 2024-11-17 07:33 GMT

பிரசவத்தின்போது கர்ப்பிணியின் மலக்குடலை கத்தரித்த டாக்டர் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தென்காசி முடியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது மனைவியின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கும் போது, தவறுதலாக மலக்குடலை கத்தரித்தாக மனுவில் கூறியுள்ளார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் அலட்சியத்தால் ஏராளமான பணத்தையும் செலவு செய்து, மன உளைச்சலுக்கு ஆளானதாகவும்,

எனவே சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரர் புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்