- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலையில் பனிப்பொழிவு நிலவியது. மேற்கு தொடர்ச்சி மலையினால் சூழப்பட்ட தேனி மாவட்டத்தில் இதுவரை போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்நிலையில், ஆண்டிபட்டியில் கடந்த சில நாட்களாக புல்வெளி மற்றும் தாவரங்களில் பனித்துளிகள் அதிக அளவில் காணப்படுகிறது.மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பனிப்பொழிவு அதிகம் உள்ளதால், இனி வரும் நாட்களில் மழை பெய்யுமா? அல்லது பருவமழை பொய்த்துவிடுமா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.