"8 நாளா சாப்பாடு இல்ல... பிள்ளைகளோட நாங்க எங்க போறது?" - தி.மலை கோர விபத்து... கதறும் மக்கள்
திருவண்ணாமலையில், மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வழியில்லாமல் தவித்து வருவதாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். மலை தீபத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அங்கு வசித்து வந்தவர்கள் தற்போது வாடகை வீடுகளில் வசித்து வரும் சூழலில், மண் சரிவு ஏற்பட்டு 23 நாட்கள் ஆகியும் தங்களுக்கு அரசு சார்பில் மாற்று இடம் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தங்களுக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்றும், மாற்று இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனர்.