"இது நடந்தால்... 100 நாள் வேலை திட்டம் பாதிக்கும்..." புலம்பும் கிராம மக்கள் | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டக்குடி ஊராட்சியை, பரமக்குடி நகராட்சியோடு இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனை செயல்படுத்தினால் தங்கள் கிராமத்திற்கு கிடைக்கும் அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேறாது எனவும், 100 நாள் வேலை கூட கிடைக்காத சூழல் ஏற்படும் என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.