பரபரப்பை கிளப்பிய இன்ஸ்டா வீடியோ... களமிறங்கிய போலீசார்... அதிரும் சோசியல் மீடியா
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இருசக்கர வாகன ரேஸிற்கு அழைப்பு விடுத்து இன்ஸ்டாகிராமில் பரவும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களை புகைப்படம் எடுத்து அதை ரீல்ஸாக செய்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இருசக்கர வாகன ரேஸிற்கு தயாராக இருப்பதாகவும், யாராக இருந்தாலும் ரேஸிற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். வீடியோவில் பதிவான இருசக்கர வாகன எண்ணை வைத்து இளைஞர்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.