எண்ணி பார்த்தால் ஒரு ஆள் மிஸ்ஸிங் - 5 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்

Update: 2024-12-23 16:04 GMT

திருப்பூர் நல்லூர் பகுதியில், இந்து முன்னணி நிர்வாகியிடம் நகை வழிப்பறி செய்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் வருகை பதிவினை சரிபார்த்தபோது சிறையில் ஒரு நபர் குறைந்தது தெரியவந்தது. இதுகுறித்த அட்டவணையை சரிபார்த்தபோது கைதி சூர்யா இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தப்பி ஓடிய நபர் குறித்த விவரங்களை போலீசார் சோதனைச் சாவடிகளுக்கும், காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையின் உதவி சிறை அலுவலர்கள் கங்காராஜன், சீதா, முதல்நிலைக் காவலர் ராஜபாண்டி, இரண்டாம் நிலை காவலர்கள் சக்திவேல், ரவிக்குமார் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்