தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள
கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு
ஏற்பட்டதால், கடந்த 3ஆம் தேதி முதல் சுற்றுலாப்
பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக அருவியின்
நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு முற்றிலும்
இல்லாத நிலையில், அருவியில் வெள்ளப் பெருக்கு
குறைந்து, நீர் வரத்து சீரானதால், 6 நாட்களுக்குப் பின்
சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி
அளித்துள்ளனர். ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில்
சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.