தமிழக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலில், 2023ஆம் ஆண்டில் மட்டும் தமிழக காவல்துறையில் மொத்தம் 313 காவலர்கள், பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு காவலர் கொலை செய்யப்பட்ட நிலையில், 46 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 55 பேர் விபத்திலும், 59 பேர் மாரடைப்பு காரணமாகவும் உயிரிழந்த நிலையில், 145 பேர் உடல் நிலை சரியில்லாமலும் இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு 337 பேரும், 2021 ஆம் ஆண்டு 414 பேரும், 2022 ஆண்டு ஆண்டு 283 போலீசார் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.