மனைவியை வீட்டுக்கு அழைத்த கணவர்.. அனுப்பாத மாமியார் - காண்டாகி கட்டையால் ஆளுக்கொரு அடி
குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாத மைத்துனர் மற்றும் மாமியாரை கட்டையால் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வரும் சுமன்ராஜ் என்பவருக்கும், கடலூர் சுனாமி காலணியை சேர்ந்த வினோதினிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி வினோதினி தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைக்க வந்த சுமன்ராஜூக்கும், அவருடைய மைத்துனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கட்டையால் மைத்துனர் மற்றும் மாமியாரை தாக்கிவிட்டு சுமன்ராஜ் தப்பி ஓடிவிட்டார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.