அடையாளமே தெரியாமல் கூறுபோட்டு கிடந்த சடலம்... கல்குவாரியில் நடந்தது என்ன?

Update: 2024-11-24 02:54 GMT

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கல்குவாரியில் இருந்து பல துண்டங்களாக மீட்கபட்ட ஆண் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவக்கடை பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வானூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனர். சடலத்தின் தலை, கை, கால்கள் ஆகியவை வெட்டப்பட்டிருந்ததால் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து வானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே கல் குவாரியில், பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்