காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-11-24 00:57 GMT
  • மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக கூட்டணி... மொத்தமுள்ள 288 இடங்களில், 230-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது..
  • ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது, காங்கிரஸ், ஜே.எம்.எம். கூட்டணி... மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 இடங்களை கைப்பற்றியது... ஜார்க்கண்ட் சட்டப்பேரவை குழு தலைவராக இன்று தேர்வாகிறார், ஹேமந்த் சோரன்...
  • ஒட்டுண்ணியாக மாறி விட்ட காங்கிரஸ் கட்சியால் எந்த தேர்தலிலும் தனித்து வெற்றி பெறவே முடியாது... மகாராஷ்டிர தேர்தல் வெற்றியை குறிப்பிட்டு பிரதமர் மோடி கடும் சாடல்...
  • மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேச்சு... தேர்தல் முடிவுகளை விரிவாக ஆராய்வோம் என்றும் தகவல்...
  • வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், நான்கு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி... நாடாளுமன்றத்தில் வயநாடு மக்களின் குரலாக ஒலிப்பேன் என உறுதி...
  • நாடு முழுவதும் 48 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், 26-ல் அமோக வெற்றி பெற்ற பாஜக கூட்டணி... இந்தியா கூட்டணி 10 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 12 தொகுதிகளிலும் வெற்றி...
  • டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில், இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம்... நாளை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை...
  • டிசம்பர் 2ஆம் வாரத்தில் தமிழக சட்டபேரவை கூட உள்ளதாக தகவல்... ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது...
  • மக்களுக்கான நல்ல திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்காமல் கரப்பான் பூச்சி பெயரையா வைப்பார்கள்...? எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிலடி...
  • பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டம்... எடப்பாடி பழனிசாமியே இதனை உறுதிபடுத்தி விட்டார் என்றும் விளக்கம்...
  • ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சவுதி அரேபியாவில் இன்று நடைபெறுகிறது ஐபிஎல் மெகா ஏலம்... . 367 இந்திய வீரர்கள் உள்பட 577 பேர் ஏலத்தில் பங்கேற்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...
Tags:    

மேலும் செய்திகள்