"பந்து எடுக்க போனான்.." - "ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போதே.." நொடியில் பிரிந்த சிறுவன் உயிர்

Update: 2024-11-24 03:16 GMT

திருவல்லிக்கேணி குளக்கரையை சேர்ந்த வசந்தகுமார் - கோதைஸ்ரீ தம்பதியின் 2 மகன்கள், தேரடி தெருவில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, 8 வயது சிறுவன் மனவாலி என்பவர், வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் பந்து விழுந்த‌தை எடுக்க சென்றுள்ளார். அங்கு, லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 10 அடி பள்ளத்தில், பந்தை எடுக்க முயன்றபோது, சிறுவன் மனவாலி தவறி விழுந்துள்ளார். தண்ணீரில் சிக்கி அலறியதை கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று, சிறுவனை மீட்டுள்ளனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று, பின்னர், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்