சிலையை அகற்ற வந்த போலீஸ்.. நடு ரோட்டில் ருத்ர தாண்டவம் ஆடிய பெண்கள் - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

Update: 2024-11-24 02:57 GMT

காட்பாடி அருகே அரசு நிலத்தில் வைக்கப்பட்ட சாமி சிலையை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய நிலையில், பெண்கள் சாமியாடி எதிர்ப்பு தெரிவித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடியை அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோயில் உள்ளது. இங்கு, அரசுக்கு சொந்தமான இடத்தில், புதிதாக சிலை வைத்து சுற்றுச் சுவர் அமைத்து, ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சென்று, சாமி சிலை மற்றும் கல் தூண்களை அகற்ற முயன்றனர். அப்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, கல் தூண் ஹாலோ பிளாக் கற்களை அப்புறப்படுத்தி, சாமி சிலையை பறிமுதல் செய்தனர். அதே நேரத்தில், சிலையை அகற்றக்கூடாது என்று பெண்கள் சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்