அதிகாலை 4 மணியிலிருந்து.. அலைகடலென திரண்ட பக்தர்கள்..நிரம்பி வழியும் திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து வரிசைகளிலும் கூட்டம் அலைமோதியதால், சுமார் 4 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.