Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.04.2025) | 6 PM Headlines| ThanthiTV

Update: 2025-04-20 00:45 GMT
  • குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?... மாணவர்களை படிப்பைவிட்டு வெளியேற்றி, குடும்பத் தொழிலையே செய் என மத்திய அரசு சொல்வதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
  • சென்னை அடுத்த குன்றத்தூரில், சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்... மக்கள் கொடுத்த பரிசுகளை பெற்றுக்கொண்டு, அவர்களோடு கை குலுக்கி மகிழ்ந்தார்...
  • கட்சிக்கும், தலைவருக்கும் களங்கம் கூடாது என்பதால், முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்த‌தாக துரை வைகோ விளக்கம்... மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியை சிதைக்கும் வேலையை சிலர் செய்வதாகவும் குமுறல்...
  • இன்று நடைபெறும் மதிமுக நிர்வாக‌க்குழு கூட்டத்தில் துரை வைகோவின் குற்றச்சாட்டு குறித்து பேசப்படும்... நிர்வாக‌க்குழு உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்...
  • நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல்காந்தி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டு அஞ்ச மாட்டோம்....  நேஷனல் ஹெரால்டு சொத்துகள் முடக்கப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி....
  • பாஜக கூட்டணியால் அதிமுகவின் மொத்த வாக்குகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்குத்தான் வரும்..... தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சு.....
  • தமிழகத்தில் திருத்தணி, மதுரை, கரூர் பரமத்தி உட்பட 7 இடங்களில் சதமடித்த வெயில்... வேலூரில் அதிகபட்சமாக 104.9 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு...
  • பிரான்ஸிடம் 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடற்படைக்கான 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா... பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா வரும் நிலையில், ஏப்ரல் 28ம் தேதி இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது......
  • ஐபிஎல் 36வது லீக் ஆட்டத்தில் ஆவேஷ் கானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் லக்னோ அணி த்ரில் வெற்றி.... ராஜஸ்தான் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்.....
Tags:    

மேலும் செய்திகள்