சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கதி... தி.மலையில் பரபரப்பு
செங்கம் அடுத்த அம்மா பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், வியாழன்று வழக்கம் போல் மதிய உணவு மற்றும் முட்டை வழங்கி உள்ளனர். இதை சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவர்கள் 8 பேர்,வயிற்று வலியால் துடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மேல் பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.