அதிகாலை பெற்றோர்களுக்கு வந்த மெசேஜ் .. பள்ளி முதல்வரிடம் சரமாரி கேள்வி - பரபரப்பு வீடியோ

Update: 2024-12-12 11:29 GMT

கனமழையால் இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட பின்னரும் சென்னை சின்ன போரூரில் பொன் வித்யாஷ்ரம் என்ற தனியார் பள்ளி மட்டும் மாணவர்களுக்கு தேர்வு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. இதனால் கொட்டும் மழையிலும் மாணவர்களை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் பள்ளி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவர்களும் தேர்வினை எழுதி எழுதினர். தேர்வு முடிந்ததும் 12 மணிக்கு பள்ளிகள் விடப்பட்ட நிலையில் கொட்டிய மழையில் மாணவர்களை பெற்றோர் கடும் சிரமங்களுக்கு இடையே அழைத்துச் சென்றனர். மழையில் நடக்க முடியாமல் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக கண்டிப்பாக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்... மேலும் ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்... இதனால் பெரும் பரபரப்பு நிலவியது...

Tags:    

மேலும் செய்திகள்