"எப்படி வீட்டுக்கு போவது" - காலதாமதமாக வந்த அறிவிப்பு - பள்ளி மாணவர்கள் கடும் அவதி
மழைக்காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்போது, வழக்கமாக காலை 7 மணிக்குள்ளேயே விடுமுறை அறிவிக்கப்பட்டு விடும். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 9 மணிவரை விடுமுறை அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிகளுக்கு வந்தனர். அவர்கள் பள்ளிகளுக்கு வந்த பின் திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர்.