சென்னை ஏர்போர்ட்டில் வெள்ளம் - ரத்தான விமானங்கள்

Update: 2024-12-12 10:57 GMT

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் பெய்து வரும் கனமழையால், விமான நிலையத்தின் வருகைப்பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், விமான பயணிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்கத்தா, சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் வேகம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், விமானங்கள் ரத்து மற்றும் கால தாமதம் குறித்து அறிந்து கொள்ள, அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளும்படியும், பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்