#JUSTIN || சென்னை வானில் தரையிறங்க முடியாமல் தவித்த விமானம் - அந்தரத்தில் 72 பயணிகள்
சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்னாட்டு முனையத்திற்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து அலையன்ஸ் ஏர் விமானம் 72 பயணிகளுடன் தரையிறங்க வந்தது. சென்னை விமான நிலைய பகுதியில் பலத்த மழை கொட்டியபடியதால் மோசமான வானிலை நிலவியது. இதையடுத்து விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது.
ஆனாலும் வானிலை சீரடையாததால் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அலையன்ஸ் ஏர் விமானத்தை மீண்டும் தராபாத்துக்கே திருப்பி அனுப்பினர்.
இதை அடுத்து ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் சென்னையில் மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் மீண்டும் ஐதரபாத்துக்கு திரும்பி சென்று தரை இறங்கியது.