கொட்டி தீர்க்கும் கனமழை... நிரம்பி வழியும் 423 ஏரிகள் - பீதியில் மக்கள்

Update: 2024-12-12 09:00 GMT

கொட்டி தீர்க்கும் கனமழை... நிரம்பி வழியும் 423 ஏரிகள் - பீதியில் மக்கள்

கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்

சென்னை மாவட்டங்களில் உள்ள 423 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 528 ஏரிகளில், 345 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 167 ஏரிகள் 75 சதவீதம்

முதல் 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில், 71 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 81 ஏரிகளும், 75 சதவீதத்தை 118 ஏரிகளும், 50 சதவீதத்தை 110 ஏரிகளும் எட்டியுள்ளன. சென்னை

மாவட்டத்தில் உள்ள 16 ஏரிகளில் 7 ஏரிகள் முழு கொள்ளளவையும், 4 ஏரிகள் 99 சதவீத கொள்ளளவையும், 5 ஏரிகள் 75 சதவீத கொள்ளளவையும் எட்டியுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்