தி.மலையை தொடர்ந்து கிருஷ்ணகிரி..எதிர்பாரா நேரம் ஆக்ரோஷமாக உருண்டு வந்துவீட்டில் மேல் விழுந்த பாறை
- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சையத் பாஷா மலையில் இருந்து, ராட்ச பாறை ஒன்று இன்று அதிகாலை உருண்டு விழுந்து, அடிவாரத்தில் இருந்த ஒரு வீட்டில் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.