சேட்டைகளை அள்ளி தெளித்த யானைகள்... ஆச்சரியத்தில் கண்டு ரசித்த மக்கள் வார விடுமுறையை ஒட்டி நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்குவதைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், காலை - மாலை என இருவேளை யானைகளை அணிவகுத்து நிற்க வைத்து ஊட்டச்சத்து உணவு வழங்குவது வழக்கம். ஒவ்வொரு யானைகளுக்கும் அதன் பாகன்கள் ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதையும், யானைகள் செய்யும் குறும்புகளையும் கூடி நின்று சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.