அண்ணா பல்கலை. விவகாரம் - ஆளுநருக்கு ஆசிரியர்கள் சங்கம் முக்கிய கடிதம்
அந்த கடிதத்தில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாதது பல்வேறு வழிகளில் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்றும், அன்றாட நடைமுறைகளையும் மன உறுதியையும் கடுமையாகப் பாதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி நபர்கள் நடைபயிற்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பல்கலை கழகத்தில் இரவு நேரத்தில் அனைத்து மின் விளக்குகளும் எரிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது