3 வருசமா மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. விரட்டி விரட்டி சீரழித்த ஆசிரியர்.. கொலை மிரட்டல்

Update: 2024-12-31 15:44 GMT

தஞ்சையில், போக்சோ வழக்கில் தொடர்புடைய நபர்கள், வழக்கை திரும்பப்பெற கோரி கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் டி.ஐ.ஜி அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2021-ல், கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்ற மாணவியை, அங்கு அரபி வகுப்பு ஆசிரியராக பணியாற்றிய ஜியாவுதீன் என்பவர், மூன்றாண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து படிப்பை முடித்த பின்பும் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் ரீதியாக ஜியாவுதீன் துன்புறுத்திய நிலையில், அவர் உள்பட 6 பேர் மீது இளம்பெண் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக போக்சோ வழக்கில் ஜியாவுதீன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புகாரில் தொடர்புடைய நபர்கள், வழக்கை திரும்பப்பெற கோரி கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்