தென்காசியில் நின்ற லாரிக்கு ராஜபாளையத்தில் அபராதம்.. லாரி ஓனரை பித்து பிடிக்க வைத்த மெசேஜ்

Update: 2024-12-10 08:53 GMT

தென்காசியில் நின்ற ஓட்டுநர் பயிற்சி லாரிக்கு ராஜபாளையத்தில் ஓவர் லோடு என போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தர் .இவர் கடந்த 20 ஆண்டுகளாக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து கொடுக்கும் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி தனது, கனரக ஓட்டுநர் பயிற்சி லாரியின் மீது ராஜபாளையத்தில் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் சம்பந்தபட்ட லாரியானது, கீழப்பாவூரில் நின்ற நிலையில் அங்கு எப்படி அபராதம் விதிக்கப்பட்டது என விவேகாந்தருக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக தனது லாரியை, ஜிபிஎஸ் மேப் கேமராவில் புகைப்படம் எடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். போக்குவரத்து போலீசாரின் அஜாக்கிரதையால் விதிக்கப்படும் அபராதம் காரணமாக, பலர் பாதிக்கப்படுவதாகவும் விவேகானந்தர் வேதனை தெரிவித்துள்ளார். வாகனத்திற்கு தவறாக அபராதம் விதித்த போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்