ஆட்சியரை நேரில் சந்தித்து, பள்ளி சிறுவன் கொடுத்த மனு.. - “நடவடிக்கை எடுக்கப்படும்..“
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரை நேரில் சந்தித்து பள்ளி சிறுவன் ஒருவன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தான் ஒன்பதாம் வகுப்பு படிப்பதாகவும், தான் வசிக்கும் பூக்கடை பஜார் பகுதியில் சுகதாரக்கேடு நிகழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். மனுவை நிதானமாக வாசித்த ஆட்சியர், சிறுவனின் பொறுப்புணர்வையும், சமூக அக்கறையையும் வாழ்த்தும் விதமாக முதுகில் தட்டிக் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.