நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன், தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில், அங்கு செல்வதற்கு முன்பாக அவருக்கும் வேறொரு பெண்ணிற்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொலைபேசியில் பேசும்போது வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவி பிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பிரியாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.