`டங்ஸ்டன் சுரங்கம்' விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனல் பறந்த கேள்விகள் - ஸ்பாட்டில் ரிப்ளை

Update: 2024-11-22 14:08 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் அரிட்டாப்பட்டியில் இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்தின் சார்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் மேலூர், அரிட்டாபட்டி, அழகர் கோயில் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கலந்து கொண்டு ஆட்சியரிடம் முறையிட்டனர்.

நெல்லை மாவட்டத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது போன்று, மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு சூழியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு விளக்கம் அளித்த ஆட்சியர், இது போன்ற செயல்பாடு பயன்பாட்டுக்கு வராமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்... டங்ஸ்டன் சுரங்க திட்டம் ஒப்பந்தமானது குறித்து பத்திரிக்கையில் மூலமாக தான் தெரியவந்ததாகவும், அதற்கு முன்னதாக அத்திட்டத்திற்கு எதிராக எப்படி அறிக்கை வெளியிட முடியும் என்றும் கேள்வி எழுப்பிய ஆட்சியர் மாநில அரசு இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காது எனவும் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்