செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த நீரை பருகியதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், முப்பதுக்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாஜக முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.