சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, பாரம்பரிய மீன்பிடி திருவிழா களைக்கட்டியது. காளாப்பூர் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஊத்தா கூடை, கச்சா, அரிவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு, விரால், கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்களை கிராம மக்கள் பிடித்து மகிழ்ந்தனர்.