பள்ளியில் மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை - தீயாய் வைரலாகும் வீடியோ

Update: 2025-01-12 05:17 GMT

பாலக்கோடு அருகே அரசு பள்ளியில், பழங்குடியின மாணவிகளை ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்யவைத்ததாக, பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெருங்காடு மலைகிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளை, தினமும் கழிவறையை சுத்தம் செய்தல், தண்ணீர் நிரப்புதல் போன்ற பணிகளை செய்யசொல்லி, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்