விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Update: 2024-12-06 02:15 GMT

விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வரும் ஒன்பதாம் தேதி திங்கட்கிழமை அன்று, விழுப்புரம் மாவட்டத்தில் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியுள்ளார். இந்த 3 மாவட்டங்களிலும் ஜனவரி 2 முதல் பத்தாம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை, மற்ற மாவட்டங்களை போல மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்