பொதுவெளிக்கு வந்து சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி - சொன்ன பகீர் தகவல்கள்
காவல்துறையினர் தன்னிடம் நடத்திய விசாரணையை பார்க்கும்போது வெளிப்படையாகவே தன்னை மிரட்டுவது போன்று தெரிவதாக, யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்தார். பிரபல யூடியூபர் வராகி, நில மோசடி வழக்கு தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுதொடர்பாக நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.