தமிழகத்துக்கே தலைப்பு செய்தியான டிச.2 நள்ளிரவு 2.45 மணிக்கு என்ன நடந்தது?

Update: 2024-12-07 15:32 GMT

சாத்தனூர் அணையில் இருந்து, முன் அறிவிப்பு இன்றி, பல லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக எழுந்திருக்கும் சர்ச்சையின் பின்னணி என்ன பார்க்கலாம்..

சாத்தனூர் அணையில் இருந்து, முன் அறிவிப்பு இன்றி, பல லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக எழுந்திருக்கும் சர்ச்சையின் பின்னணி என்ன பார்க்கலாம்..விரிவாக..

சாத்தனூர் அணையில் இருந்து சாரை சாரையாக வெளியேற்றப்பட்ட பல லட்சம் கனஅடி நீர்.. தென்பெண்ணை ஆற்றில் கரைகளைத் தாண்டியும் ஓடி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை மூழ்கடித்து ஏற்படுத்திய பேரழிவை யாராலும் மறக்க முடியாது.

1958ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்டது தான், இந்த சாத்தனூர் அணை. 7.321 டி.எம்.சி. அளவு கொள்ளளவு கொண்ட இந்த சாத்தனூர் அணை, சுமார் 1 கி.மீ. நீளமும், 119 அடி உயரமும் என மொத்தமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதியோடு குடிநீர் வசதியை பெறும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை எதிரொலியாக, தமிழக வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன்படி, டிசம்பர் ஒன்றாம் தேதி, காலையில் 6 மணிக்கு 117.95 கன அடி நீர்மட்டம் இருந்தபோது, அணைக்கு வந்த 5000 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து காலை 11 மணிக்கு 118.05 கன அடி நீர்மட்டம் என இருந்தபோது, அணைக்கு 15,500 கன அடியாக நீர் வந்தது. இதனால், 19,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

அதேபோல, டிசம்பர் 2ஆம் தேதி நள்ளிரவு 2.45 மணிக்கு வந்த 1,68,000 கன அடி நீரும் மொத்தமாக அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தது தெரியவந்திருக்கிறது.

இப்படியாக நேரம் ஆக..ஆக.. அணைக்கு வந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது.

இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்ட மக்கள், இந்த கடும் வெள்ளத்தில் சிக்கி வரலாறு காணாத பேரழிவை சந்தித்து இருக்கிறார்கள்..

இப்படியாக, நள்ளிரவில் அணையை திறந்துவிட்டு பேரழிவை ஏற்படுத்தியதாக, எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் எனப் பலரும் குற்றம்சாட்டி உள்ளனர்.

விடாமல் அதிகரித்துக் கொண்டே வந்த மழைநீரின் அளவைக் கொண்டு, வரப்போகும் பாதிப்பை முன்கூட்டியே கணிக்கத் தவறிய அதிகாரிகள், இரவுக்கும் மேல் கொட்டித்தீர்த்த மழையால் மள மளவென வந்த நீரை, செய்வதறியாமல் அப்படியே உபரிநீராக சாத்தனூர் அணையில் இருந்து சாரை சாரையாக வெளியேற்றி இருப்பது தெரியவருகிறது.

இதனால் தான், தென்பெண்ணை ஆறு கடந்து செல்லும் இந்த மாவட்டங்கள் ஒட்டுமொத்தமாக இரவோடு இரவாக பேரழிவை சந்தித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசு மழை குறித்து கடந்த நவம்பர் 27ஆம் தேதியே அளித்த எச்சரிக்கையை அடுத்து, முன்னெச்சரிக்கையாக இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் மழை குறித்து அறிவித்தும், குறிப்பிட்ட நாளில் இரவில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தான் காரணம் என்றும், அணைக்கு லட்சக்கணக்கில் வந்த மழைநீரை அப்படியே, வெளியேற்ற காரணம் எனக் கூறப்படுகிறது.

இதற்கான முழுக்காரணத்தை கூற வேண்டும் என அரசு விளக்கவேண்டும் என அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கின.

ஃபெஞ்சல் புயலால் நீர் பிடிப்பு பகுதியில் பெரும் மழைப்பொழிவு காரணமாக, சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே கணித்தே, அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் வெளியேற்றப்பட்டதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அதேபோல, 5 முறை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாகவும் துரைமுருகன் அறிக்கை மூலம் விளக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இரவில் மழைவெள்ளம் குறித்து முழுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட வில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

குறிப்பாக, 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்பை விட, இப்போது திறந்துவிடப்பட்ட நீரும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் பன்மடங்கு அதிகம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்