வெள்ள நிவாரண நிதி வழங்காததை கண்டித்து சாலை மறியல் - திண்டிவனத்தில் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பேரடிக் குப்ப கிராம மக்கள் ஃபெஞ்சல் புயல் வெள்ள நிவாரண நிதி வழங்காததை கண்டித்து திண்டிவனம் -திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.