சனாதனம் என்பது மரபு சார்ந்த பாரம்பரிய வழி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்..
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது, மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சனாதனம் என்பது மரபு சார்ந்த பாரம்பரிய வழி என்றும், அது அனைத்து உயிர்களுக்கும் சமமாக விளங்குவதாகவும் கூறினார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொல்வதும் சனாதனம் தான் என கூறிய ஆளுநர், மாணவர்கள் வளமான இந்தியாவை உருவாக்க பெரிய அளவில் கனவு காண வேண்டும் எனவும் தெரிவித்தார்...