சேலம் மாவட்டம் ஆலச்சம்பாளையத்தில் அமைந்துள்ள முனியப்பன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து முனியப்பன் சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இதைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.