கேவலமாக பேசும் மருத்துவர்..குழந்தைக்கு சிகிச்சைக்காக வந்து அசிங்கம் பட்ட பெற்றோர்..
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக, அரசு மருத்துவர் மீது சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் விமல், தனது ஒரு வயது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர், குழந்தையை பரிசோதித்து விட்டு அரசு குழந்தைகள் நல மருத்துவரை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், குழந்தைகள் நல மருத்துவர் குழந்தைக்கு சிகிச்சையளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், வேறு வழியில்லாமல் தனது குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக சமூக ஆர்வலர் குற்றம்சாட்டினார்.