மனைவி உயிரிழந்த சோகம்.. சோகத்தில் கணவன் எடுத்த முடிவு .. வானில் மலரும் 40 ஆண்டு கால காதல் வாழ்க்கை

Update: 2024-11-25 01:52 GMT

உடல் நலக்குறைவால் மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டம் பணகுடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணகுடியை சேர்ந்த வயதான தம்பதி பக்கீர் மைதீன் மற்றும் ஆயிஷா பீவி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதி, பின் கேரளாவில் உள்ள தங்களது மகன் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஆயிஷா பீவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதில், இரு தினங்களுக்கு முன்பு ஆயிஷா பீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த சோகத்தில் இரு நாள்களாக மனமுடைந்தே காணப்பட்ட பக்கீர் மைதீன், அதிகாலையில் திடீரென அவரும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது, பக்கீர் மைதீனே அருகில் இருந்து மனைவியை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலான மண வாழ்க்கையில் மனைவி உயிரிழந்த சோகத்தில், கணவரும் இறந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்