ரேணுகா சுவாமி கொலை வழக்கு..! வெளியான முக்கிய ஆதாரம்..! நடிகர் தர்ஷனுக்கு அடுத்த சிக்கல்
ரேணுகா சுவாமி கொலை வழக்கு..! வெளியான முக்கிய ஆதாரம்..! நடிகர் தர்ஷனுக்கு அடுத்த சிக்கல்
ரேணுகாசுவாமி கொலை வழக்கில், கொலை நடந்த இடத்தில் நடிகர் தர்ஷன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரவி வருகிறது.
ரேணுகா சுவாமி கொலை வழக்கில், சுமார் 1,300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தனர். அதில், கொலை நடந்த இடத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதை காட்டும் வகையிலான புகைப்படங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. மேலும், 40க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளும் இடம் பெற்றிருந்தது. இதனிடையே, நடிகர் தர்ஷன் ஜாமின் பெற்றார். இந்நிலையில், கொலை நடந்த இடத்தில் நடிகர் தர்ஷன் மட்டும் தனியே எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி பரவி வருகிறது. கொலை நடந்ததாக கூறப்படும் நேரத்திற்கும், தர்ஷன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நேரமும் தர்ஷனுக்கு எதிரான சாட்சியங்களை மேலும் வலுப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. மேலும், இதனை ஆதாரமாக வைத்து தர்ஷனுக்கான ஜாமினை ரத்து செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.