பாஜக கொடி கட்டிய கருப்பு நிற கார்களில் வலம் வந்த 9 பேர் கொண்ட ரவுடி கும்பலை, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீசார் சுற்றி வளைத்த போது அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். தீவட்டிப்பட்டி போலீசார் காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் சோதனை செய்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், சென்னை பதிவேண் மற்றும் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய இரண்டு கார்களையும், காருக்குள் இருந்த பட்டா கத்திகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய முக்கிய குற்றவாளிகளான பண்ணப்பட்டி மணிகண்டன், நடுப்பட்டி சசிகுமார் உள்ளிட்ட 9 பேர் மீது நகை திருட்டு, ஆட் கடத்தல் உட்பட 16 வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.