கையில் இருந்து குளுக்கோஸ் பாட்டிலுக்கு சென்ற ரத்தம்.. பெண் மரணம்... அரசு ஹாஸ்பிடலில் அதிர்ச்சி
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் பெண் இறந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த ருக்மணி, ஸ்கேன் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், குளுகோஸ் ஏற்றும்போது கையில் இருந்து ரத்தம் குளுக்கோஸ் பாட்டிலுக்கு சென்றதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனை வீடியோ எடுத்தபோது, காவலாளிகள் மிரட்டி வீடியோவை நீக்க வைத்ததாகவும் குமுறினர். இறுதியாக போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து ருக்மணி உடலை வாங்கி சென்றனர்.