அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற பள்ளி துணை ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், ஆசிரியர் பணிக்கு கவிதா என்பவர் தேர்வாகியுள்ளார். அவரது தேர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கவிதாவின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இந்நிலையில் அனுமதி தர, இடைநிலை பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமார், கவிதாவின் கணவரிடம் கூகுள் பே மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகாரின்பேரில் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், செந்தில்குமாரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டா