கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டி கொண்டாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி | RN Ravi

Update: 2024-12-21 02:10 GMT

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள், கிறிஸ்தவ மத போதகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கலைநிகழ்ச்சிகளை கண்டுரசித்த ஆளுநர், தொடர்ந்து கேக் வெட்டி கிறிஸ்துமசை கொண்டாடினார். தொடர்ந்து பேசிய ஆளுநர், இயேசு கிறிஸ்துவை ஒரு நாடு, சாதி, மதம், எல்லை, நிலம் என எதற்குள்ளும் வரையறுக்க முடியாது என்றும், இயேசு அனைவருக்கும் பொதுவானவர் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்