வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்.. வட கடலோர பகுதிகளுக்கு வார்னிங்.. 45 கிமீ வேகத்தில் வரும் ஆபத்து?
மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கே நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 370 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கே 450 கிமீ தொலைவில் ஆந்திரா கடற்கரையில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், வடதமிழக கடலோரப்பகுதியில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.