கொட்டிய பலத்த மழை.. சூறையாடிய சூறைக்காற்று.. வேரோடு விழுந்த மரங்கள்.. ஆட்டம் காட்டிய ரீமால் புயல்

Update: 2024-05-27 06:30 GMT

ரீமால் புயல் கரையைக் கடந்த நிலையில், மேற்கு வங்கம் தெற்கு 24 பர்கானாஸில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சூறைக்காற்று வீசியதால், அலிபூர் பகுதியில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேற்கு வங்கத்தின் பல பகுதிகள் கனமழையை எதிர்கொண்டன.

ரீமால் சூறாவளியை அடுத்து கொல்கத்தாவில் தொடர் மழை பெய்து வருகிறது. கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகள், வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளத்தால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ரீமால் சூறாவளியால், மேற்கு வங்கத்தின் சாகர் பிளாக்கில் உள்ள நிம்பித் ஆசிரமத்திற்குப் பின்புறம் கங்காநகரில் முறிந்து விழுந்த மரங்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அப்புறப்படுத்தினர். மேற்கு வங்கத்தின் 9 மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 14 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது தவிர கூடுதல் குழுக்கள் தேவைக்கேற்ப அனுப்ப தயாராக உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்