பெரும் பரபரப்பை கிளப்பிய `படம்' - தியேட்டரில் பார்க்க குவிந்த பல்வேறு அரசியல் கட்சியினர்

Update: 2025-01-13 06:36 GMT

ஈழப் போர் தொடர்பான படத்தை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஈழ போரில் கொல்லப்பட்ட இசைவாணி என்ற பெண் அனுபவித்த சித்திரவதைகளை மையமாக வைத்து பெங்களூருவைச் சேர்ந்த கணேசன் போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்தை உருவாக்கி பின்னர் 18.05.2009 என தலைப்பை மாற்றினார். இந்த படத்தை ராஜபாளையத்தில் உள்ள தியேட்டரில் திரையிட விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், ரசிகர்களும் தியேட்டர் முன் குவிந்தனர். இந்த சூழலில், படத்திற்கு தடை உள்ளதாக கூறி போலீசார் திரையிட அனுமதி மறுத்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்